‘சோழ நாட்டான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘சோழ நாட்டான்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘களவாணி-2’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விமல் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் ‘சோழ நாட்டான்.’

இந்தப் படத்தை ஹரிஷ் பிலிம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாரி வள்ளல் தயாரிக்கிறார்.

இந்தப் புதிய திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான கார்ரொன்யா கேத்ரின் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில்  முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கின்றார். மேலும், தென்னவன், நாகி நாயுடு, சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை,  போஸ் வெங்கட், சௌந்தரபாண்டியன்,  எம்.எஸ்.குமார் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - நட்சத்திர  பிரகாஷ், இசை - நவீன் ஷங்கர், பாடல்கள் – கலைக்குமார், சபரீஷ், இணை தயாரிப்பு - ஐ.மனோகரன். எழுத்து, இயக்கம் - பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா.

வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

968A5163

இந்தப் படத்திற்காக பிரம்மாமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு கிராபிக்ஸ் முறையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலம் காட்டில் உள்ள  மலைப் பகுதியில் தமிழ் சினிமா இதுவரை காணாத  காடுகளில் படப்பிடிப்பு  நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் தஞ்சாவூர், ஹைதராபாத்,  வைசாக்,  போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.  

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகுதான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சை பெரிய கோவிலில் குட முழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த படம் சோழ நாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குட முழுக்கை முன்னிட்டு சோழ நாட்டை பெருமைப்படுத்தும்விதமாக இந்த பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள்.