அருண் விஜய்-பிரசன்னா-பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மாபியா-பாகம்-1’ திரைப்படம்

அருண் விஜய்-பிரசன்னா-பிரியா பவானி சங்கர் நடிப்பில் ‘மாபியா-பாகம்-1’ திரைப்படம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மாபியா-பாகம்-1’.

இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். பிரசன்னாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளார்.

இசை – ஜாக்ஸ் பெஜாய், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், படத் தொகுப்பு – ஶ்ரீஜித் சாரங், சண்டை இயக்கம் – டான் அசோக், கலை இயக்கம் – சிவசங்கர், உடைகள் வடிவமைப்பு – அசோக்குமார், விஷிவல் எஃபெக்ட்ஸ் – Knack Studios, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D’one, நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜன், தயாரிப்பு – சுபாஸ்கரன், தயாரிப்பு நிறுவனம் – லைகா புரொடெக்சன்ஸ், எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.

டீஸர் வெளியீட்டிற்குப் பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்புமிக்க படமாக மாறியுள்ளது ‘மாபியா-பாகம்-1’ திரைப்படம்.

பட வெளியீட்டை முன்னிட்டு  நேற்று இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வில் படம் பற்றி அவர் பேசும்போது, “இந்த ‘மாபியா-பாகம்-1’ என்னுடைய மூன்றாவது திரைப்படம். போலீஸ் பின்னணியில் அமைந்த கதை. சென்னைதான் கதைக் களம்.

இரண்டு வேறு வேறு குணங்கள்  கொண்ட கதாப்பாத்திரங்கள் இடையே நடக்கிற போர்தான் இந்தப் படத்தின் மையக் கதை. ஒரு எலிக்கும், பூனைக்கும் இடையில் நடக்குற மாதிரியான கதைதான் இந்தப் படம்.

karthick naren 

இப்படம்   நான் – லீனியர் முறையில் நடப்பதாக கதை  அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இருக்கின்றன. பாடல்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையோட சம்பந்தபட்டதாகத்தான் இருக்கும். தனியாக இருக்காது.

படத்தில் நாயகன் அருண் விஜய் போதைப் பொருள் தடுப்புத் துறையில் அதிகாரியாக நடித்துள்ளார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவரிடம் அந்தளவுக்கான திறமையும் இருக்கிறது.

பிரசன்னாவின் கேரக்டர் இந்தப் படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. ஆனால் நடிப்பில் கலக்கியிருக்கிறார்.

பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கு வேறு நாயகிகளையும் தேடிப் பார்த்தோம். ஆனால் இந்தக் கேரக்டருக்கு அவர்தான்  பொருத்தமாக இருப்பார் என்று  மொத்த படக் குழுவும் சொன்னதால்  அவரைத் தேர்ந்தெடுத்தோம்.  அவரும்  நன்றாகவே நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்  எல்லாம் நடித்திருக்கிறார். இந்த ரோல் அவருக்கு புது மாதிரியாக இருக்கும்.  

இவர்கள் தவிர படத்தில் நிறைய சின்ன கதாப்பாத்திரங்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  இருக்கும்.

அதிகப்பட்சமாக சென்னையில்தான் படப்பிடிப்பினை நடத்தியுள்ளோம். மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது. வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது. வரும் பிப்ரவரி 5-ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாடலை வெளியிட இருக்கிறோம்…” என்றார்.

Our Score