full screen background image

‘சந்தமாமா’ படத்தின் ஹீரோயின் ஸ்வேதா பாசு பாலியல் தொழில் வழக்கில் கைது..!

‘சந்தமாமா’ படத்தின் ஹீரோயின் ஸ்வேதா பாசு பாலியல் தொழில் வழக்கில் கைது..!

பாலியல் தொழிலில் ஈடுபட்டதான வழக்கில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் நேற்று இரவு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

swetha-basu-prasad-1

ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் நேற்றிரவு போலீஸார் ரெய்டு நடத்தியுள்ளனர்.

இதில்தான் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் மற்றும் அவருடன் இருந்த சில தொழில் அதிபர்களும் பிடிபட்டுள்ளனர்.  வழக்கம்போல தொழில் அதிபர்களை ஹோட்டலிலேயே கழட்டிவிட்டுவிட்ட போலீஸ் ஸ்வேதா பாசுவையும் அவருடைய ஏஜெண்ட் பாலுவையும் மட்டுமே கைது செய்துள்ளது.

இந்த ஸ்வேதா பாசு பிரசாத், தமிழில் ‘ரா ரா’ மற்றும் ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் நடித்தவர். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சம்பாத்தியமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. பிறகேன் இப்படி..?

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக டிவி 9 தெலுங்கு சேனல் நடத்திய ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் பாலியல் தொழிலுக்கு கூப்பிட்டவுடன் வரக் கூடியவர் என்று பாலியல் தொழில் புரோக்கர்கள் இருவரால் அடையாளம் காணப்பட்டவர்.

இன்னொரு முறை போலீஸாரிடமே பாலியல் தொழில் ரெய்டில் சிக்கினார். அப்போது வேறொரு ஸ்வேதா பாசுதான் அது. நானில்லை என்று சொல்லி தப்பித்து கொண்டார். ஆனால் இன்றைக்கு அவரே சிக்கிக் கொண்டவுடன் “முன்னாடியே நாங்கள் இவரை பிடித்து எச்சரித்தோம். கேட்கவில்லை…” என்று சொல்கிறது பஞ்ச்ராஹில்ஸ் போலீஸ்.

இனி என்ன செய்யப் போகிறார் ஸ்வேதா பாசு..?

Our Score