full screen background image

நடிகை அமலா பாலின் ‘கடாவர்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

நடிகை அமலா பாலின் ‘கடாவர்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

முன்னணி நட்சத்திர நடிகையான அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதியன்று வெளியாகிறது. 

இந்தப் படத்தில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுத, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். மலையாள இயக்குநரான அனூப் எஸ். பணிக்கர் இயக்கியிருக்கிறார்.

முதுகுத் தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் வகையில் தயாராயிருக்கும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம் இது.

நகரில் மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொலைகளுடன் போலீஸ் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த தடயவியல் நிபுணரான பவித்ராவும் கொல்லப்படுகிறார்.

போலீஸ் உயரதிகாரியான விஷால் இந்த மர்மக் கொலைகள் பற்றி விசாரிக்கிறார். இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.

இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய காலக்கட்டத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இதனைத் இந்தக் ‘கடாவர்’ படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி +ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Our Score