full screen background image

பிருந்தா மாஸ்டரின் ‘தக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

பிருந்தா மாஸ்டரின் ‘தக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

தென்னிந்திய திரையுலகில் நடன இயக்குநராக புகழ் பெற்ற பிருந்தா மாஸ்டரின் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய ஆக்சன் திரைப்படம் ‘தக்ஸ்’.

ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஹிர்ரூது ஹாரூன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருடன்  நடிகர்கள் சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.  பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ‘தக்ஸ்’ படத்தில் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான ராஜசேகர் மற்றும் ஃபோனீக்ஸ் பிரபு ஆகிய இருவரும் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுன் 10-ம் தேதியன்று தொடங்கி நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நட்ப கலைஞர்களின் முழுமையான ஒத்துழைப்புடன்  திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.  

குமரி மாவட்டத்தைக் கதையின் பின்னணி களமாக கொண்டிருந்தாலும், இப்படத்தின்  படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பான ‘தக்ஸ்’ என்ற டைட்டில் வெளியானவுடன், இப்படம் பற்றி இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்பார்ப்பினை எகிற வைத்தது. இதன் காரணமாக ‘தக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Our Score