இயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்

இயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற வெற்றிப் படமான ‘கன்னி மாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் போஸ் வெங்கட், தனது அடுத்தப் படத்தைத் துவக்கியிருக்கிறார்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மூவ் ஆன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.பி.மகேந்திரன், பி.பாலகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ‘உறியடி’ படத்தின் நாயகனும், இயக்குநருமான விஜயகுமாரும், பசுபதியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

தயாரிப்பு - மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம்.பி.மகேந்திரன், பி.பாலகுமார், கதை, இயக்கம் - போஸ் வெங்கட், திரைக்கதை, வசனம் - பாஸ்கர் சக்தி, ஒளிப்பதிவு - இனியன் ஜே.ஹாரிஸ், படத் தொகுப்பு - ஜியான் ஸ்ரீகாந்த், கலை இயக்கம் – சிவசங்கர், இசை - ஹரி சாய், சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், பாடல்கள் – விவேகா, மக்கள் தொடர்பு - நிகில் முருகன்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப் போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும், ஊருக்கும், போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைக் களத்தைக் கொண்டிருக்கிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழிற் நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.