சாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..!

சாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..!

பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் S.சுமதி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘புரவி’.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷி நடிக்க, அவரோடு இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடங்களில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், ஃபர்ஷத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனம் – பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – S.சுமதி, எழுத்தும், இயக்கம் – ஜி.ஜே.சத்யா, ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், படத் தொகுப்பு – மணி குமார், ரகு சேதுராமன், கலை இயக்கம் – எம்.எஸ்.பி.மதன். இசை – பி.முகமது ஆதிப், பாடல்கள் – கே.வி.கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் – சிவபாலன், நிர்வாக தயாரிப்பாளர் – ஷிமோர், சண்டை இயக்கம் – அசோக் குமார், நடன இயக்கம் – சதீஷ், உடைகள் வடிவமைப்பு – பூர்ணிமா டி.ஆர்., உடைகள் – நடராஜ், ஒப்பனை – கார்த்திக் ஹரி, புகைப்படங்கள் – பாக்யா, டிசைன்ஸ் – ரெட் டாட் பவன், ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்ட் – A.செல்வம், இணை இயக்குநர் – வெங்கடேஷ், துணை இயக்குநர்கள் – சந்தோஷ், அன்பு, விக்னேஷ், கங்கய்யா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இன்றைய சமூகத்தில், வேகத்திற்கு இணையாக விவேகம் முன்னெடுக்கப்படாத நிலையில், பெண்களுக்கு எதிரான அநீதிகளும், குற்றங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

ஒரு பெண்ணின் பார்வையில் இந்த நிகழ்வுகளை, கிரைம்-அரசியல்-திரில்லர் என ஒரு அதிரடி திரைப்படத்தை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில், படைக்கவிருக்கிறார் இயக்குநர் சத்யா.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score