2013-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரை நெடுந் தொடர்கள், வாரத் தொடர்கள் மற்றும் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2013-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரை நெடுந் தொடர்கள், வாரத் தொடர்கள் மற்றும் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளுக்குத் தேர்வு பெற நிபந்தனைகள் மற்றும் தகுதிகள் கீழ்க்கண்டவாறு :
2013-ம் ஆண்டில் ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிவரையிலான காலத்தில் நெடுந் தொடர் மற்றும் வாரத் தொடர்கள் சின்னத்திரையில் ஒளிபரப்ப்ப்பட்டிருக்க வேண்டும்.
நெடுந்தொடர் ஒளிபரப்பு ஆரம்பித்து முடியாதிருக்கும் நிலையில் அத்தொடர் குறைந்தபட்சம் 130 பகுதிகள் ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.
வாரத் தொடர்களெனில் குறைந்தபட்சம் 26 பகுதிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகியிருக்க வேண்டும்.
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
சிறந்த நெடுந் தொடருக்கு முதல் பரிசு 2 லட்சம். இரண்டாம் பரிசு 1 லட்சம்.
சிறந்த வாரத் தொடருக்கு 1 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
சிறந்த சின்னத்திரை கலைஞருக்கான விருதுகள்
2013-ம் ஆண்டுக்கான சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளுக்கு தேர்வுக் குழுவிற்கு வரப் பெற்ற நெடுந் தொடர் மற்றும் வாரத் தொடர்களிலிருந்து கீழ்க்கண்ட பிரிவுகளில் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பொற் பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
1.சிறந்த கதாநாயகன்
2.சிறந்த கதாநாயகி
3. சிறந்த குணச்சித்திர நடிகர்
4. சிறந்த குணச்சித்திர நடிகை
5. சிறந்த வில்லன் நடிகர்
6. சிறந்த வில்லி நடிகை
7. சிறந்த குழந்தை நட்சத்திரம்
8. சிறந்த இயக்குநர்
9. சிறந்த கதையாசிரியர்
10. சிறந்த திரைக்கதையாசிரியர்
11. சிறந்த உரையாடலாசிரியர்
12. சிறந்த ஒளிப்பதிவாளர்
13. சிறந்த படத்தொகுப்பாளர்
14. சிறந்த பின்னணி இசையமைப்பாளர்
15. சிறந்த தந்திரக் காட்சியாளர்
16. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)
17. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வகை விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப்ப் படிவங்களை 10 ரூபாய் செலுத்தி இயக்குநர், செய்தி மக்க்ள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களிடமிருந்து 30-04-2015 முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 100 ரூபாய் பதிவுக் கட்டணமாக நாட்டுடமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை (The Director, Information and Public Relations Department) என்ற பெயரில் எடுக்கப்பட்ட கேட்புக் காசோலையை (Demand Draft) இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27-05-2015 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
இயக்குநர்
திரைப்படத் துறையினர் நல வாரியம்,
தரமணி,
சென்னை–113.