full screen background image

“புதிய படங்களை 2 மாதம் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும்” – தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

“புதிய படங்களை 2 மாதம் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும்” – தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
நாம் ஏற்கனவே பேசி ஒப்புக் கொண்டபடி, திரைப்படங்களை OTT-யில் கீழ்க்கண்ட முறையில்தான் திரையிட அனுமதிக்க வேண்டும்.
 
1, பெரிய நடிகர்களின் படங்களை திரைக்கு வந்து 8 வாரங்கள் கழித்தும். அதுக்கு அடுத்த வரிசையில் உள்ள நடிகர்களின் படங்களை 6 வாரங்கள் கழித்தும் OTT-யில் திரையிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
2, தமிழ் திரைப்படங்களை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும்.
 
3, சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால். தமிழகத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
 
1, திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம்.
 
மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு: ரூ.250 வரையும்
 
A/C திரையரங்குகளுக்கு: ரூ.200 வரையும்
 
NON A/C திரையரங்குகளுக்கு: ரூ. 150 வரையும்
 
என்ற வகையில் கட்டணத்தை நிர்ணயித்து கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
2, நம் பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும், திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதிகள் வழங்கப்பட வேண்டும்.
 
திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும்.
 
3, Operator License-க்கு தாங்கள் புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதை வைத்து நாங்கள் எந்த பலனையும் அடையவில்லை. ஆகவே அதை மாற்றி நாங்கள் கேட்டதுபோல் Operator License தேவையில்லை அல்லது எளிய முறையில் Operator License-ஐ தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
 
4, MALL-களில் உள்ள திரையரங்குகளில் Commercial Activity-க்கு அனுமதி வழங்கியது போல், மற்ற திரையரங்குகளுக்கும் Commercial Activity-க்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
5, தற்போது MSME விதிகளைப் பின்பற்றி திரையரங்குகள் இயங்கி வருவதால், தியேட்டர்களுக்கான மின் கட்டணத்தை MSME விதிப்படி நிர்ணயித்து வசூலிக்க வேண்டுகிறோம். 
 
மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி கொடுத்தால்தான் திரையரங்குகளை நஷ்டமின்றி எங்களால் நடத்த முடியும்.
 
நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மிக்கத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Our Score