full screen background image

2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் அறிவிப்பாணை வெளியானது..!

2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் அறிவிப்பாணை வெளியானது..!

2013-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் மொழியில் 3000 மீட்டர் நீளத்திற்குக் குறைவில்லாமலும், அல்லது 90 நிமிடங்களுக்குக் குறைவில்லாமல் ஓடக் கூடிய அளவிலும் தயாரிக்கப்பட்டு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் 01-01-2013 முதல் 31-12-2013-ஆம் தேதிக்குள்ளான காலவரையறைக்குள் தணிக்கைச் சான்றளிக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படங்கள் இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும்.

தமிழில் மொழி மாற்றம்(டப்பிங்) செய்யப்பட்ட படங்கள் இந்தத் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டாது.

முதல் பரிசு 2 லட்சம். இரண்டாம் பரிசு 1 லட்சம். மூன்றாம் பரிசு 75 ஆயிரம்., சிறப்புப் பரிசு 75 ஆயிரம் என வழங்கப்படும்.

பெண்களைப் பற்றி சிறந்த முறையில் பிரதிபலிக்கின்ற திரைப்படத்திற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசாகப் வழங்கப்படும்.

அளவான, திட்டமிட்ட, குடும்பத்திற்கான நெறிமுறைகளை வலியுறுத்தும் மூன்று படங்களுக்கு ரொக்கப் பரிசாக முதல் பரிசு – ரூபாய் 50 ஆயிரம், இரண்டாம் பரிசு – ரூபாய் 25 ஆயிரம், மூன்றாம் பரிசு – ரூபாய் 10 ஆயிரம் என வழங்கப்படும்.

1. சிறந்த நடிகர்

2. சிறந்த நடிகை

3. சிறந்த நடிகர்

4. சிறப்புப் பரிசு

5. சிறந்த நடிகை

6. சிறப்புப் பரிசு

7. சிறந்த வில்லன் நடிகர்

8. சிறந்த நகைச்சுவை நடிகர்

9. சிறந்த நகைச்சுவை நடிகை

10. சிறந்த குணச்சித்திர நடிகர்

11. சிறந்த குணச்சித்திர நடிகை

12. சிறந்த குழந்தை நட்சத்திரம்

13. சிறந்த இயக்குநர்

14. சிறந்த கதையாசிரியர்

15. சிறந்த உரையாடல் ஆசிரியர்

16. சிறந்த இசையமைப்பாளர்

17. சிறந்த பாடலாசிரியர்

18. சிறந்த பின்னணிப் பாடகர்

19. சிறந்த பின்னணிப் பாடகி

20. சிறந்த ஒளிப்பதிவாளர்

21. சிறந்த படத்தொகுப்பாளர்

22. சிறந்த சண்டை பயிற்சியாளர்

23. சிறந்த நடன ஆசிரியர்

24. சிறந்த கலை இயக்குநர்

25. சிறந்த ஒப்பனைக் கலைஞர்

26. சிறந்த தையற் கலைஞர்

27. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர்(ஆண்)

28. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) 

ஆகியோர்களுக்கு தலா 5 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வகை விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை 10 ரூபாய் செலுத்தி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களிடமிருந்து 30-04-2015 முதல் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 100 ரூபாய் பதிவுக் கட்டணமாக நாட்டுடமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை (The Director, Information and Public Relations Department) என்ற பெயரில் எடுக்கப்பட்ட கேட்புக் காசோலையை (Demand Draft) இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27-05-2015 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

இயக்குநர்

திரைப்படத் துறையினர் நல வாரியம்,

தரமணி,

சென்னை–113 

இந்த விருதுகள் மட்டுமில்லாமல் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் ஆகியோரது பெயர்களில் ‘கலைத் துறை வித்தகர்கள்’ விருதுகளையும் தமிழக அரசு வழங்கும்.

இந்த விருதுகளுக்கு யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வு கமிட்டியினரே தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

Our Score