full screen background image

குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘பெல்’

குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘பெல்’

சமீபத்தில் வெளியான மலையாள படமான ‘மின்னல் முரளி’ படத்தில் ‘சிபு’வாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம், தற்போது ‘குரு பிரம்மா’வாக பெல்’ என்கிற திரைப்படத்தில்  கதையின் வில்லனாக நடிக்கிறார்.

Brogan movies நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

இசை – ராபர்ட், பாடல்கள் – பீட்டர் சக்ரவர்த்தி, ஒளிப்பதிவு – பரணி கண்ணன், கதை, வசனம் – வெயிலோன். திரைக்கதை இயக்கம்  – R.வெங்கட் புவன்.

தவறான ஒருவனுக்கு கிடைத்துவிடக் கூடாத ஒரு ரகசியம் உள்ளது. பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான ‘கிரகாம் பெல்’ என்ற  பார்வைத் திறனற்ற தனி நபரின் கதையே இந்த ‘பெல்’ திரைப்படம்

பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.  இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப் பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில்  உருவாகியுள்ளது.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

Our Score