full screen background image

54-வது வயதில் 5-வது கணவரை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகை

54-வது வயதில் 5-வது கணவரை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட்டில் பிரபலங்கள் திருமணம் செய்வதும், டைவர்ஸ் செய்வதும், டைவர்ஸ் செய்த நபரையே திரும்பவும் திருமணம் செய்வதும், திரும்பவும் அவரை டைவர்ஸ் செய்வதும் மிகவும் சகஜமான ஒன்று. ஒரு திரைப்படத்தில் நடிப்பதுபோலவே அவர்களின் திருமணமும், டைவர்ஸும் நடந்து முடிந்துவிடும். தற்போது டைவர்ஸ் லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை பமீலா ஆண்டர்சன்.

பிரபல கனடியன் – அமெரிக்க நடிகையான பமீலா ஆண்டர்சன் தனது 54 வயதில் 5-வது முறையாக தற்போதைய கணவரை விவகாரத்து செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

பமீலா ஆண்டர்சன், பிளேப ாய் இதழின் அட்டைப் படத்தில் பல முறை இடம் பெற்ற பெருமைக்குரியவர். ‘ஹோம் இம்ப்ரூவ்மென்ட்’, ‘பேவாட்ச்’ மற்றும் ‘வி.ஐ.பி.’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலமும், ‘ரா ஜஸ்டிஸ்’, ‘பார்ப் வயர்’, ‘சூப்பர் ஹீரோ மூவி’, மற்றும் ‘ப்ளாண்ட் அண்ட் ப்ளாண்டர்’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலமும் பிரபலமானார். ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் இந்தி பதிப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நான்காவது சீசனிலும் பமீலா கலந்து கொண்டார்.

தற்போது அவர் தனது 5-வது கணவரை 54 வயதில் விவாகரத்து செய்து தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

இவரின் முதல் கணவர், மொட்லி க்ரூவின் டிரம்மர் டாமி லீயை அறிமுகமான நான்கே நாட்களில் பிப்ரவரி 19, 1995 அன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிராண்டன் தாமஸ் மற்றும் டிலான் ஜாகர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ஜோடி 1998-ல் விவாகரத்து பெற்றது.

அதன் பிறகு மாடல் மார்கஸ் ஷென்கென்பெர்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் பமீலா. ஆனால், இவர்கள் 2001-ல் பிரிந்தனர்.

பிறகு, பாடகர் கிட் ராக்கை 2006-ல் இரண்டாவதாக மணந்து அதே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்.

2007-ஆம் ஆண்டில், போக்கர் பிளேயர் ரிக் சாலமனை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் பமீலா. ஆனால் அடுத்த ஆண்டு, 2008-லேயே இந்த ஜோடி பிரிந்தது.

2014-ல் ரிக்கை மீண்டும் மறுமணம் செய்து கொண்ட பமீலா, 2015-ல் மீண்டும் அவரைப் பிரிந்தார்.

பின்னர் பமீலா ஆண்டர்சன் 2017-ல் பிரெஞ்சு கால்பந்து வீரர், அடில் ராமியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். 2019-ல், ராமியுடனான உறவு முடிந்துவிட்டதாக அறிவித்தார்.

ஜனவரி 20, 2020 அன்று ஹாலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை நான்காவது கணவராக பமீலா மணந்தார். ஆனால் பிப்ரவரி 1, 2020 அன்று, அதாவது வெறும் 12 நாட்களில் அவரும் பீட்டர்ஸை விட்டுப் பிரிவதாக அறிவித்து ஒட்டு மொத்த ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்தார்.

2020-ஆம் ஆண்டில், பமீலா ஆண்டர்சன் தனது மெய்க்காப்பாளரான டான் ஹேஹர்ஸ்டை ஐந்தாவதாக மணந்தார். ஆனால் இப்போது, ஐந்தாவது முறையாக அவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.

இதெல்லாம் அவங்க வாழ்க்கைல சகஜமப்பா என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

Our Score