தானாக உருவான சுயம்பு போல் தேசிய விருதை பல படங்களுடன் போட்டியிட்டு வென்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து என்ன படம் இது எனக் கேட்க வைத்த தமிழ் திரைப்படம் ‘பாரம்’.
ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை Reckless Roses நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.பா.முத்துக்குமார், ஜெயலட்சுமி, ஸ்டெல்லா கோபி, சமராஜா, வி.பிரேம்நாத், ஜெ.நட்ராஜ், எஸ்.நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – ரெக்லெஸ் ரோசஸ், தயாரிப்பாளர்கள் – பிரியா கிருஷ்ணசுவாமி, அர்ட்ரா ஸ்வரூப், நிர்வாகத் தயாரிப்பு – அர்ட்ரா ஸ்வரூப், இசை – வெட் நாயர், ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத் தொகுப்பு – பிரியா கிருஷ்ணசுவாமி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, விளம்பர வடிவமைப்பு – என்.ஜீவானந்தம், திரையரங்க வெளியீடு – எஸ்.பி.சினிமாஸ், எழுத்து, இயக்கம் – பிரியா கிருஷ்ணசுவாமி.
தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலராலும் பாராட்டப் பெற்றுள்ள இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது Gross Root Films நிறுவனத்தின் பெயரில் SP Cinemas மூலம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியிடுகிறார்.