full screen background image

ஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..!

ஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..!

சந்திரா மீடியா விஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.திருமுருகன் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இது இவரது இரண்டாவது தயாரிப்பாகும்.

சந்திரா மீடியா விஷன் தனது முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் ‘பட்டி புலம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது,

இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்த இரண்டாவது படத்தின் நாயகனாக ஆரி அர்ஜுனா நடிக்கிறார். உடன் நாயகிகளாக நடிகை சிருஷ்டி டாங்கே, மற்றும் ‘பிக் பாஸ்’ பிரபலங்களான லாஸ்லியா, அபிராமி  வெங்கடேசன் ஆகிய மூவர் நடிக்கவுள்ளனர்.

இவர்களுடன் இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – எல்.கே.விஜய், இசை – சி.சத்யா, கலை இயக்கம் – வீரசமர், படத் தொகுப்பு – எம்.தியாகராஜன், சண்டை இயக்கம் – ஹரி தினேஷ்,  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆல்பர்ட் ராஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score