full screen background image

“ஜி.வி.பிரகாஷூக்கும் விருது கொடுத்திருக்கணும்..” – தயாரிப்பாளர் தாணுவின் ஆதங்கம்..!

“ஜி.வி.பிரகாஷூக்கும் விருது கொடுத்திருக்கணும்..” – தயாரிப்பாளர் தாணுவின் ஆதங்கம்..!

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக நடிகர் தனுஷ் நடித்திருந்த அசுரன்’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும், ‘சிறந்த நடிகர்’ என்ற விருதினையும் தனுஷ் பெற்றுள்ளார். இந்நிலையில் தேசிய விருது பெற்று தந்த ‘அசுரன்’ படத்தின் இயக்குநரான வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ‘கலைப்புலி’ S.தாணு பேசியதாவது, “1992-ல் இயக்குநர் பாலுமகேந்திரா எனக்கு ஒரு விருது வாங்கிக் கொடுத்தார் . அதன் பிறகு இப்போது தம்பி வெற்றி மாறன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

தற்காக தம்பி தனுஷுக்குத்தான் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் இயக்குநர் வெற்றி மாறனை என்னிடம் அறிமுகப்படுத்தியதுயே தம்பி தனுஷ்தான். அப்போது தனுஷ் என்னிடம் “அடுத்தப் படத்தை வெற்றியோடு நாம் பண்ணுவோம்..” என்றார். அப்படித்தான் இந்த அசுரன்’ துவங்கியது.

தம்பி தனுஷுக்கு இந்த விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் ரவுண்டிலேயே தனுஷுக்கு விருதை எடுத்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும், இந்தப் படத்தில் நிறைய பேர்களுக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஜீ.வி.பிரகாஷுன் இசைக்கு நிச்சயமாக விருது கிடைக்கும் என்றே நம்பினேன். கிடைக்காததில் இப்போதும் எனக்குப் பெரும் வருத்தம் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் வெற்றி மாறன் என்னிடம், “சார், இந்தப் படத்திற்காக வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன்…” என்று சொன்னார்.

‘அசுரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்ட பின் படம் குறிப்பிட்ட நாளில் வெளியாக வேண்டுமே என்பதற்காக அவர் தன்னை பெருமளவில் வருத்திக் கொண்டு வேலை செய்தார். அவரிடம் இருக்கும் உழைப்புதான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. வருங்கால இயக்குநர்கள் வெற்றி மாறனைப் பின்பற்ற வேண்டும்.

படத்தின் படத் தொகுப்பு செய்த நேரத்தில் அவருக்கு சிக்கன் குனியா வந்துவிட்டது. ஆனாலும் அதையும் தாங்கிக் கொண்டுதான் வெற்றி மாறன் வேலை செய்தார். அவரின் இலக்கு பணமல்ல; வெற்றிதான். அதற்காகத்தான் அவருக்கு ‘வெற்றி மாறன்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெற்றி மாறனின் இந்தக் கடினமான உழைப்புக்கு நான் என்றும் உதவியாக இருப்பேன்…” என்றார்.

 
Our Score