‘அரண்மனை’ முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ‘அரண்மனை-3’ திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
இந்தப் படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பு தயாரிக்க C.சத்யா இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘அரண்மனை’ மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களைவிட மிகப் பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘ரசவாச்சியே’ இன்று வெளியாகி உள்ளது.
தனது இனிய குரல் மூலம் ரசிகர்களை வசீகரிக்கும் மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.