full screen background image

படம் பார்த்தவர்களை பிரமிக்க வைக்கும் சுந்தர்.சியின் ‘அரண்மனை-3’

படம் பார்த்தவர்களை பிரமிக்க வைக்கும் சுந்தர்.சியின் ‘அரண்மனை-3’

அரண்மனை 1, 2 படங்களைவிட அரண்மனை-3’ படம் வித்தியாசமாகவும் மிக சிறப்பான கதையம்சத்துடனும், பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

‘அரண்மனை-3’ படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொது மக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினமும் சிறிது நேரம் படப்பைடிப்பு நிறுத்தி வைத்து பொது மக்கள் பூஜை செய்து கலைந்து சென்ற பிறகு படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர்.

இதேபோல் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது படக் குழுவினருக்கு எதிர்பாராத அமானுஷ்ய அனுபவங்களும் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்னும் ஊரில் மகாராஜாவான ராஜ்ஸ்ரீஅமர்சிங் என்னும் ராஜ்புத் அரசரால் 1907-ம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை வேண்கனியர் பேலஸ்.

இந்த வேண்கனியர் அரண்மனையில்தான் அரண்மனை-3’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்ட்டுள்ளன. பழமையன அரண்மனை என்பதால் படப்பிடிப்பின்போது இரவு நேரங்களில் திடீரென்று குதிரை கனைத்துக் கொண்டு அரண்மனையை சுற்றி சுற்றி வரும் சத்தம் இரவு முழுதும் கேட்குமாம்.

அது மட்டுமின்றி, பதிவு செய்த காட்சிகளில் படக் குழுவினர் வைக்காத அரசரின் பொருட்கள் அமானுஷ்யமாக பதிவாகியிருக்குமாம். இதை பார்த்து படக் குழுவினர் அடிக்கடி திகிலடைந்துள்ளனர்.

அரண்மனை-3’ ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கப் போவது உறுதியாகியுள்ளது.

Our Score