full screen background image

A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல்-தம்பி ராமையா நடிக்கும் புதிய படம்

A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல்-தம்பி ராமையா நடிக்கும் புதிய படம்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில் ஜீவன், மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாம்பாட்டம்.’

மேலும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினி’ படத்தையும் இதே நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

தற்போது மீண்டும் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

விழாவில் நாயகன் விமல், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தம்பி ராமைய்யா, படத்தின் இசையமப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் மகேந்திர குமார், களாபி, பரமசிவம், முருகானந்தம், கலைமகன் முபாரக், திருமலை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்வாக தயாரிப்பு – ராஜா ஸ்ரீதர், தயாரிப்பு மேற்பார்வை – பூமதி – அருண், மக்கள் தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.வெங்கடேஷ், தயாரிப்பு – V.பழனிவேல்.

படம் பற்றி இயக்குநர் A.வெங்கடேஷ் பேசும்போது, “நான் இயக்கும் முதல் பேய் படம் இது. முற்றிலும் மாறுபட்ட இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் இது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கின்றன ஆனால், இது வழக்கமான பேய் படம் அல்ல., முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதிலிருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து ஜனரஞ்சகமான படமாக உருவாக்க இருக்கிறேன்.

விஜய் சத்யா நடிப்பில் நான் இயக்கிய ரஜினி’ படப்பிடிப்பிற்கு ஒரு நாள் தயாரிப்பாளரை பார்க்க விமல் வந்தார். அப்போது நான் இந்த படத்தின் ஒன் லைனை சொன்னவுடன் அங்கேயே தங்கி முழு கதையையும் கேட்டார். உடனே, “கதை மிகவும் அற்புதமாக இருக்கிறது. உடனே படப்பிடிப்பை துவங்கிவிடலாம் என்று சொல்லிவிட்டார்.

நாங்களும் உடனே அதற்கான வேலைகளை துவங்கி விட்டோம். மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுளோம்…” என்றார்.

Our Score