“நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கப் போகிறேன்” – சிவகார்த்திகேயன் ஒப்புதல்

“நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கப் போகிறேன்” – சிவகார்த்திகேயன் ஒப்புதல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் ‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’ போன்ற படங்கள் உள்ளன.

இதில், ‘டாக்டர்’ படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. நாளை அக்டோபர் 9-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், விரைவில் தான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தனுஷ் நடிக்கவிருக்கும் தெலுங்கு படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறதாம். இதே நிறுவனம்தான் தனுஷை வைத்தும் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தை தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘ஜாதி ரத்னாலு’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்கப் போகிறாராம்.

Our Score