அப்புக்குட்டிக்கு ஜோடி வர்ஷா – முறைக்கும் சிங்கம்புலி..!

அப்புக்குட்டிக்கு ஜோடி வர்ஷா – முறைக்கும் சிங்கம்புலி..!

ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் தயாரிக்கும் படம் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது.’ இதன் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. தமிழக பா.ஜ.க. தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் இந்தப் படத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தப் படத்தில் விக்ரம் சிவா மற்றும் ரக்சன் இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சாரா தேவா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, அப்புக்குட்டி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். லால்பாபு ஒளிப்பதிவில் தாஜ்நூர்  இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாரதிமோகன்.

நேற்று பூஜையின்போது அமைச்சர் காத்துவாயனாக படத்தில் நடிக்கும் மனோபாலா ஏழை திருமணங்களை நடத்தி வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. மனோபாலா நடத்தி வைக்கும் இந்த்த் திருமண ஜோடிகளில் அப்புக்குட்டி – வர்ஷா ஜோடியும் ஒன்று. அப்புக்குட்டி, வர்ஷா கழுத்தில் தாலி கட்ட அதைப் பார்த்த சிங்கம்புலி அதிர்ச்சி அடைகிறார். ‘ஏன்? எதற்கு..?’ என்பதையெல்லாம் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..” என்றார் இயக்குநர் பாரதிமோகன். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாம். 

Our Score