‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது.
‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் பிரபலமான அப்புக்குட்டி, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெந்து தணிந்தது காடு’ என தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள ‘வாழ்க விவசாயி’ படத்தில், கதையின் நாயகனாக, விவசாயியாக வாழ்ந்து, நடித்துள்ள அப்புக்குட்டிக்கு மீண்டும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.
இயக்குநர் ராஜூ சந்திராவின் இயக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தில் கதையின் நாயகனாக அப்புக்குட்டி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார்.
“கதையின் நாயகனாக நடிப்பது எனக்கு பிடித்துள்ளது என்றாலும், கமல், ரஜினி, விஜய் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்..” என்கிறார்.










