பி.வி.பி. நிறுவனத்தார் பிரம்மாண்டத்தில் யாரும் எட்டாத தூரத்தை தொட்டுவிடும் வல்லமையுள்ளவர்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம்.
எவரையும் கவரும் விசால மனம் படைத்த ஆர்யா, இசை அமைப்பாளர் மரகதமணி, ஒளிபதிவாளர் நீரவ் ஷா, என சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பிரம்மாண்டமான அணி வகுப்பு என்று படம் மிரட்டலாக வளர்ந்து வருகிறது.
இந்த பிரம்மாண்டங்களுக்கு மணி மகுடம் சூட்டுவதைப் போல், இப்போது இந்த படத்தின் வெளியீடும் மிக பிரம்மாண்டமாக உலகெங்கும் 1500 திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.
அக்டோபர் 2-ம் தேதி உலகெங்கும் வெளிவரவுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக ‘இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சோனல் சௌஹன், ஊர்வசி, பரத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரஷாந்தி ஆடை வடிவமைப்பு செய்ய, ஆனந்த் சாய் கலை இயக்கம் செய்திருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை இயற்றியிருக்கிறார், பிரவின் படத் தொகுப்பு செய்ய.. கனிகா தில்லான் எழுதியிருக்கும் கதைக்கு ஆர்.எஸ் பிரசன்னா வசனம் எழுதியிருக்கிறார், பிரகாஷ் கோவில்முடி இயக்கத்தில் வளர்ந்து வருகிறது ‘இஞ்சி இடுப்பழகி’.
இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க விஷயமே அனுஷ்காவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். ஹீரோக்கள் மட்டுமே உடல் எடையைக் கூட்டியும், குறைத்தும் நடிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை இப்போது இதற்கு ஒத்துக் கொண்டு நடிப்பதென்பது ஆச்சரியமானதுதான். அந்த ஆச்சரியத்தை செய்திருப்பது நடிகை அனுஷ்காதான்.
இந்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக டயட்டையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு ஒரே மாதத்தில் குண்டாகியிருக்கிறார்.
குண்டு அனுஷ்காவின் சீன்களையெல்லாம் படமாக்கிய பிறகு உடனடியாக பழைய எடை அளவுக்கே தன்னைக் குறைத்துக் கொண்டு வந்து நின்று படக் குழுவினரை அசத்தியிருக்கிறார் அனுஷ்கா. ‘டெடிகேஷன் நடிகை’ என்று பாராட்டுகிறார்கள் கேள்விப்பட்ட திரையுலகத்தினர் அனைவரும்.
இந்தப் படத்தின் First look போஸ்டரில் தெரியும் அனுஷ்காவை பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறார். திரையில் பார்த்தால் எப்படியோ..?