இன்று 2015 ஆகஸ்ட் 14-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
இது நடிகர் ஆர்யாவின் சொந்தப் படம். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு நீரவ்ஷா. இசை – டி.இமான், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன். கலை – ஜாக்கி, நடனம் – தினேஷ், பாடல்கள் – நா.முத்துக்குமார், ஜி.ரோகேஷ்.
2. வாலு
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். இதில் சிம்பு, ஹன்ஸிகா, சந்தானம், விடிவி கணேஷ் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – சக்தி, இசை – எஸ்.தமன், எடிட்டிங் – டி.எஸ்.சுரேஷ், கலை – லால்குடி இளையராஜா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், கனல் கண்ணன், பாடல்கள் – சிம்பு, கார்க்கி, எழுத்து – இயக்கம் – விஜய் சந்தர்.
3. நிராயுதம்
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரித்திருக்கிறார். இதில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – சரவணகுமார், இசை – கனி, எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த், கலை மோகன மகேந்திரன், தயாரிப்பு நிர்வாகம் – C.ஜெயராஜ், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – M.B.ராஜதுரை.
4. அகிலா முதலாம் வகுப்பு
தாய் திரை தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.செல்வம், வி.பி.சரவணகுமார் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் முற்றிலும் புதுமுகங்களே நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு கே.பி.சுல்பி, இசை – சந்திரசேகர், எடிட்டிங் – கோபால். எழுதி, இயக்கியிருக்கிறார் சுரேஷ் சரண்.













