இயக்குநர் சிகரம். கே.பி.யின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்..

இயக்குநர் சிகரம். கே.பி.யின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்..

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி :

இயக்குனர் பாலச்சந்தர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கும் இவர்தான் வித்திட்டார். 

தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக ‘தாதா சாகேப் பால்கே’ விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவரின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப இயலாது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Our Score