‘அலறல்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ‘சாய்’ தீனா

‘அலறல்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் ‘சாய்’ தீனா

GD புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அலறல்’.

இந்தப் படத்தில் புதுமுகங்களான நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும் நடித்துள்ளனர். மேலும், ‘சாய்’ தீனா மாறுபட்ட இரட்டை வேடங்களிலும், குழந்தை நட்சத்திரங்களாக பேபி - தன்யஸ்ரீ மாஸ்டர் – K.சுடர் நிலவன்  ஆகியோரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர்களான ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் இருவரும் கூறுகையில், "இப்படம் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் பெண்ணியம் மற்றும் குழந்தை மனோதத்துவவியலை கருவாகக் கொண்டு திகில் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த கமர்சியல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.." என்றார்கள்.

‘அலறல்’ திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டார்.