30 வருடங்களுக்குப் பிறகு அமலா நடிக்கும் தமிழ்த் திரைப்படம்..!

30 வருடங்களுக்குப் பிறகு அமலா நடிக்கும் தமிழ்த் திரைப்படம்..!

கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்ச் சினிமா ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பதும் பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படத்தில்தான் நடிகை அமலா நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் அமலாவுடன் ‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த், ரீத்து வர்மா, சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீகார்த்திக் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகின்றார்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

மீண்டும் தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு வேலைகள் துவங்கியது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “தமிழக அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நாங்கள் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்..!” என்றார்.

Our Score