full screen background image

ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சுனைனா

ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சுனைனா

ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் ‘கவலை வேண்டாம்.’ ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய இயக்குநர் டீகேதான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். நடிகர் ஜீவா – காஜல் அகர்வால் ஜோடி முதல் முறையாக இந்தப் படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறது.

????????????????????????????????????

ரசிகர்களின் எதிர்பார்ப்பை சம்பாதித்துள்ள ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 7-ம் தேதி(தசரா விடுமுறை நாட்களில்) ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க வெளியாக இருக்கிறது. 

நம்முடைய அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் போல, தமிழ் திரையுலகில்  வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுனைனா, இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

3863b0f9-5d11-44d4-85da-346bef43ce07 

இந்தப் பட அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட நடிகை சுனைனா, “தமிழக ரசிகர்களுக்கு தரமான படங்களை வழங்கி வரும்  எல்ரெட் குமார் ஸாரின், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவன தயாரிப்பில் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்திருப்பது, எனக்கு பெருமையாக இருக்கின்றது.

கூடவே, ஜீவா சாருடன் சேர்ந்து நடித்ததிலும் எனக்கு மகிழ்ச்சிதான்.  இயக்குநர் டீ.கே. என்னிடம் படத்தின் கதையை கூறும்போதே, இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாக வேண்டும் என நான் முடிவு செய்துவிட்டேன்.

ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சாதுவான பெண் கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரம், நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது..” என்றார்  நடிகை சுனைனா.

Our Score