தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஸ்டுடியோ 9.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் தொடங்கிய இந்நிறுவனத்தின் வெற்றிப் பயணம், சமீபத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம்வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த ஸ்டூடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் மிரள வைக்கும் வில்லனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘மருது’ படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கியிருந்தார். தற்போது மேலும் பல படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு வெற்றிப் பயணத்தில் இருக்கும் R.K.சுரேஷ், தற்போது ஹீரோவாகவும் நடிக்கிறார். God is Mother Pictures தயாரிக்கும் புதிய படத்தில்தான் சுரேஷ் கதாநாயகன் வேடம் புனைகிறாராம். மலையாள இயக்குநரான சஜித் இந்தப் படத்தைத் தயாரித்து எழுதி, இயக்குகிறார்.
இப்படத்தில் சுரேஷுடன் இணைந்து தாக்ஷா, ரியாஸ்கான், கும்கி அஸ்வின், மிப்புசாமி, சந்திரமௌலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை – F.S.பைசல், ஒளிப்பதிவு – கேசவன், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், ஸ்டண்ட் – ஜான் மார்க், நடனம் – தீனா, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – சஜித்.
இந்தப் படம் இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது.