full screen background image

“கல்யாணமெல்லாம் ஆகலீங்கோ..” – மறுக்கிறார் நடிகை ஷகிலா

“கல்யாணமெல்லாம் ஆகலீங்கோ..” – மறுக்கிறார் நடிகை ஷகிலா

கல்யாணம் ஆன நடிகைகளுக்கு பிரச்சினை இல்லைதான். ஆகாதவங்களுக்குத்தான் இது போன்று அக்கப்போருகள் அதிகம்.

யாராவது தெரிந்தவர்களிடம் நெருக்கமாக கட்டிப் பிடிப்பதை போன்று புகைப்படம் கிடைத்தால் போதும்.. கம்ப்யூட்டர் வைரஸைவிடவும் அதி வேகமாக அந்தப் புகைப்படத்தைப் பற்றி ஒரு கதையை எழுதி இணையத்தில் பரவ விடுகிறார்கள். இந்த முறை மாட்டியிருப்பவர் நடிகை ஷகிலா.

actress sakeela-hero

நேற்று முன்தினம் காலையில் ஒரு இளைஞருடன் ஷகிலா நிற்பது போன்று புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்துவிட்டு ‘ஷகிலா ரகசிய திருமணம் செய்துவிட்டார்’ என்று எழுதியே வி்ட்டார்கள். ஷகிலாவின் தீவிர ரசிகர்களும் அதனை காப்பி-பேஸ்ட் செய்து பல மலையாள இணையத் தளங்களில் செய்தியாக வெளியிட்டுவிட்டார்கள். 

ஷகிலாவோ “ஐய்யோ. அது பொய்யி..” என்று கடந்த இரு நாட்களாக வந்த போன் கால்களுக்கு பதில் சொல்லியே ஓய்ந்துவிட்டாராம்.

இது குறித்து நாம் ஷகிலாவிடம் தொலைபேசியில் கேட்டபோது,  அந்த இளைஞர், ஷகிலா இயக்கியிருக்கும் தெலுங்கு, மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர். செட்டில் ஒரு முறை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று ஷகிலாதான் வற்புறுத்தி அருகில் நிறுத்தி புகைப்படம் எடுக்க வைத்தாராம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அந்த இளைஞரின் அப்பாதானாம்..

“பாவம்.. அவங்க ரெண்டு பேரும்.. ரெண்டு நாளா ரொம்ப சங்கடப்பட்டுட்டாங்க. அவங்களை சமாதானப்படுத்தறதுக்குள்ள எனக்கு போதும், போதும்னு ஆயிருச்சு. எனக்குக் கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா கண்டிப்பா உங்களுக்குச் சொல்லாம செய்ய மாட்டேன். போதுமா..?” என்றார் நம்மிடம்..!

ஷகிலா இயக்கியிருக்கும் தெலுங்கு படம் சென்சார் ஆகிவிட்டதாம். இந்த மாதமே பிரமோஷன் வேலைகளைத் துவக்குகிறாராம். “அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் நேரத்தில் உங்களால இப்படியொரு இம்சை..” என்கிறார் கோபத்துடன்..!

அட விடுங்கப்பா.. உங்க கனவுக் கன்னி அப்படியே இருந்திட்டுப் போகட்டுமே..?

Our Score