10 வினாடி ஷாட்டுக்கு ராஜஸ்தான்-5 ஷாட்டுகளுக்கு லடாக் – ‘கயல்’ படத்தின் ஆச்சரியங்கள்..!

10 வினாடி ஷாட்டுக்கு ராஜஸ்தான்-5 ஷாட்டுகளுக்கு லடாக் – ‘கயல்’ படத்தின் ஆச்சரியங்கள்..!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் ‘கயல்’ என்ற படத்தை தயாரித்திருக்கின்றன.

இதில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.  கதாநாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார்.  மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினி ராஜேஸ்வரி, யார் கண்ணன், பாரதி கண்ணன், ஜேக்கப்,    யோகி தேவராஜ், ஜானகி செளந்தர், பிளாரன்ட் C.பெரேரா, வெற்றிவேல் ராஜா, பாலசுப்பிரமணியம், மைக் கோபி, தரணி, அன்புமதி, ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.   

கலை   –  வைர பாலன்

பாடல்கள்  –  யுகபாரதி

இசை  –  D. இமான்

நடனம்  –  நோபல்

ஒளிப்பதிவு –  V.மகேந்திரன்

எடிட்டிங் – சாமுவேல்

ஸ்டண்ட்  –  மிராக்கில் மைக்கேல்

தயாரிப்பு நிர்வாகம்  – கே.டி.எஸ்.சாமிநாதன்

தயாரிப்பு  மேற்பார்வை   –  செந்தில் .

இணை தயாரிப்பு   –  ஜேம்ஸ்

தயாரிப்பு     –   P.மதன்.

எழுத்து, இயக்கம்  – பிரபு சாலமன்.

படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமனிடம் கருத்து கேட்டோம்…. 

“உலகின் ஒரு பகுதியை பேரழிவாக்கிய சுனாமியால் 2004-ம் ஆண்டு டிசம்பர்  26-ம் தேதி வரலாற்றில் கருப்பு தினமாக உணரப்படுகிறது.  அந்த 2004-ம் ஆண்டு நடக்கும் காதல் கதைதான் இந்த ‘கயல்’.

இது முழுக்க, முழுக்க காதல் படம்தான்.   18 வயதே ஆன  8-10 அளவுள்ள அறைக்குள்ளேயே தனது வாழ்க்கை என எந்தவித பொழுது போக்கு விஷயங்கள், டி.வி விஞ்ஞான வளர்ச்சி பற்றியே அறியாத ஒரு பெண்ணின் மனசு கயலுக்கு..

அப்படிப்பட்ட பருவ வயதில் அவளை சந்திக்கும் ஒருவனின் உணர்வுபூர்வமான சொற்கள் – அவள் மனதில் ஏற்படுத்திய மாற்றம்  – அது காதலா என்றுகூட உணர முடியாத பக்குவம்.  

அவன் சொன்ன அந்த வார்த்தைகள்  அதுவும் தன்னை பற்றி யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் அவளை, அவனை நோக்கி ஈர்த்தது.  சிறகடிச்சு, மடைதிறந்த வெள்ளமாக பறக்க நினைக்கிறாள்.  அவன் யார்.. எங்கே இருப்பான் என்றுகூட தெரியாமல் அவனைத் தேடி அவள் போன காதல் பதிவுதான் இந்த ‘கயல்’.

உணர்வுகளை கதையின் மூலமும், பார்வைக்கு விஷுவல் மூலம் திருப்திபடுத்தவும் அதிகமாக உழைத்திருக்கிறோம்.  படத்தில் ஒரு பயணப் பாடல் வருகிறது. அதற்காக நிறையவே பயணப்பட்டிருக்கிறோம்.

பத்து வினாடிகளே இடம் பெறும் ராஜஸ்தான் காட்சிகள் – மூன்றே மூன்று ஷாட்டுகளுக்காக  சிரபுஞ்சி போனோம். லே, லாடாக் போன்ற இடங்களில் மைனஸ் 13 டிகிரி குளிரில், ஐந்து ஷாட்  மட்டுமேயான தேவைக்காக படமாக்கினோம். 

படத்தில் ஒலியமைப்புக்கான முக்கியத்துவத்தை  இதில் ரசிகர்கள் நிச்சயம் உணர்வார்கள். டால்பி அட்மாஸ் விஷயத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புது மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். வருகிற டிசம்பர் மாதம் 300 தியேட்டர்களுக்கு மேல் ‘கயல்’ படம் வெளியாக உள்ளது..” என்றார்.

Our Score