அடுத்ததும் கல்யாண செய்திதான்.. நடிகை பூஜாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறதாம். அடுத்த மாதம் நிச்சயத்தார்த்தம். டிசம்பரில் கல்யாணமாம்..!
தமிழில் சரண் இயக்கத்தில் ‘ஜேஜே’ படத்தில் அறிமுகமானவர் பூஜா. இதன் பின்பு ‘அட்டகாசம்’, ‘உள்ளம் கேட்குமே’, ‘ஜித்தன்’, ‘பட்டியல்’, ‘தம்பி’, ‘தங்கசாமி’, ‘பொறி’, ‘ஓரம்போ’, ‘நான் கடவுள்’, ‘TN-07-AL-4777’, ‘துரோகி’, ‘விடியும் முன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’.
தமிழ் நடிகைகளை போலில்லாமல் பார்த்தவுடன் அனைவருடனும் ஒற்றிக் கொள்ளும் அளவுக்கு பிரெண்ட்ஷிப்பை வளர்த்துக் கொள்ளும் பூஜாவுக்கு தமிழ் நடிகர்கள் பலரும் நெருங்கியவர்கள்தான்..! மீடியா்ககளிடம் மிகவும் நெருக்கமாக, வெளிப்படையாகப் பேசுபவர்..
கடந்த இரண்டு மாதங்களாக சென்னை வந்து பல விழாக்களில் கலந்து கொண்டார். அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தின் விழாவில் அந்தப் படத்தின் ஹீரோவை ‘தன்னை காதலித்தவன்’ என்று தைரியமாக மேடையிலேயே சொன்னவர்..
30 வயதை நெருங்கிய பூஜாவுக்கு அடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தாலும், அவரும் அதை எதிர்பார்க்கவில்லை.. மீண்டும் கொழும்புவுக்கே திரும்பிச் சென்றுவிட்டார்.
இ்ப்போது நடிகை பூஜா தன்னுடைய திருமணச் செய்தியை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அவரின் கரம் பிடிக்கவிருக்கும் மணாளனின் பெயர் தீபக் ஷண்முகநாதன் எனப்படும் தீபக் ஷா.
இவர் ஒரு ஈழத் தமிழ் இளைஞர். கொழும்புவில் பிரபலமான மாடல் அழகராம். கூடவே ஃபேஷன் டிஸைனிங் புகைப்படக் கலைஞரும்கூட.
இப்போதே பல கலை நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் பகிரங்கமாக சேர்ந்தே வருகை தந்து வருகின்றனராம்.
இருவரும் தமது முகநூல் பக்கங்களில் இத் தகவல்களைப் பகிர்ந்திருப்பதோடு, அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதையும் சொல்லியுள்ளனர்.
‘நான் கடவுள்’ மற்றும் ‘விடியும் முன்’ திரைப்படங்கள் என்றென்றும் பூஜாவின் பெருமையை தமிழ்த் திரையுலகில் சொல்லும்..
பூஜாவுக்கு நமது வாழ்த்துகள்..!














