இப்போவெல்லாம் சினிமாக்குள்ள இருக்கிற சினிமா ஆர்வலர்களைவிடவும் வெளியில் இருப்பவர்கள்தான் அதிகம்..!
ஒரு படத்தின் கதையை குறிப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அது எந்த நாட்டுப் படத்தின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் என்று படக்கென்று முட்டையை உடைத்தாற்போல சொல்லிவிடுகிறார்கள் உலக சினிமா ரசிகர்கள்.
இந்த இன்ஸ்பிரேஷன் கதையில் மட்டுமல்ல. படத்தின் போஸ்டர்களிலும்கூட வருகிறது என்பதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம்.
நேற்றைய தினம் இரவில் வெளியிடப்பட்ட வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘மாஸ்’ படத்தின் போஸ்டரும் இதேபோலத்தான் என்கிறார்கள் உலக சினிமா ரசிகர்கள்.
Bourne film series படங்களின் வரிசையில் 2007-ம் ஆண்டு வெளிவந்த ‘The Bourne Ultimatum’ படத்தின் போஸ்டரை போலவேதான், இந்த ‘மாஸ்’ படத்தின் போஸ்டரும் இருக்கிறது என்கிறார்கள்.
நடக்கட்டும்.. நடக்கட்டும்..!











