நாளை வெளியாகவுள்ள ‘மசாலா படம்’ படத்தில் பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா, கௌரவ் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியோர் நடித்து உள்ளனர். ஆல் இன் pictures சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை Auraa சினிமாஸ் நிறுவனத்தினர் வெளியிடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எழுதப்படும் ‘சினிமா விமரிசனம்’ என்ற புதிய கதைக் கருவை ஆதாரமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள இந்த ‘மசாலா படம்’ படத்தின் மூலம் லக்ஷ்மி தேவி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகை லக்ஷ்மி தேவி இந்தப் படத்தில் தன்னைச் சுற்றி மூன்று கதாபாத்திரங்கள் சுழலும் மைய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசிய நடிகை லஷ்மி தேவி, “நான் என்னுடைய பயணத்தை ஒரு மாடலாகத்தான் துவக்கினேன். ‘மசாலா படம்’ என்னை நடிகையாக அறிமுகம் செய்துள்ளது. சகல மசாலாக்களும் நிறைந்த இந்த ‘மசாலா படம்’ ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் என்றே சொல்லலாம். மிர்ச்சி சிவாவின் body language மற்றும் dialogue டெலிவரி எனக்கு மிகவும் பிடித்தது. சீரியசாக பேசி மற்றவரை சிரிக்க வைக்கும் பாங்கு அவருக்கே உரியது. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அங்கு சிரிப்பு உத்திரவாதம் என்றே சொல்லலாம். மிகவும் புத்திசாலியும்கூட.
பாபி சிம்ஹா எந்நேரமும் தனது கதாபாத்திரத்தை பற்றித்தான் சிந்திப்பார். இந்தப் படத்தில் அவர் மிகவும் கோபக்காரராக நடிப்பதாலோ என்னவோ, படப்பிடிப்பிலும் அப்பிடியேதான் இருந்தார். ‘மசாலா படம்’ அவருடைய திரையுலகப் பயணத்தில் மிக பெரிய மைல் கல்லாக இருக்கும். கௌரவ் தன்னுடைய தொழிழில் மிக கவனத்துடன் இருப்பவர், அந்த கவனமே அவரை இன்னமும் உயர்த்தப் போகிறது.
படத்தில் நாங்கள் நால்வரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளோம். இயக்குநர் லக்ஷ்மன் எடுத்துக் கொண்ட இந்த புதிய கதை களம் நிச்சயம் வெற்றி பெரும்.
சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனம் செய்வோரை பற்றிய படம் என்பதால் படத்திற்கு இப்பொழுதே ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் பார்த்து எத்தனை பேர் லைக் பண்ண போறாங்க.. எத்தனை பேர் என்ன மாதிரியெல்லாம் கமெண்ட் பண்ணப் போறாங்க என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..” என்று தன பளிச்சிடும் புன்னகையோடு கூறினார் லக்ஷ்மி தேவி.