தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்களாக நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை நகரத்தைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் நடிகர்கள் இறங்கியுள்ளனர்.
இதற்காக இன்று காலை முதல் சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறமுள்ள பூபதி நகரில் தெருக்களைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தூய்மைப் பணியில் நடிகர்கள் கார்த்தி, ஆர்யா, ராஜேஷ், ஜே.கே.ரித்தீஷ், மகேந்திரன், செளந்தர்ராஜன், உதயா அழகப்பன், நடிகைகள் வரலட்சுமி, லலிதகுமாரி, ஹேமா சந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Our Score