நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படமான ‘கொடி’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.
வரும் டிசமப்பர் 18-ம் தேதி தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ ரிலீஸாகவுள்ளது. உடனேயே தனது அடுத்தப் படத்தையும் துவக்கிவிட்டார் தனுஷ்.
தனுஷ் நடிக்கும் புதியத்தின் பெயர் கொடி. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை,செந்தில்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவின் புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். அதில் ஒன்று அரசியல்வாதி வேடம். என்பதால் அரசியல் சம்பந்தப்பட்டதாக ‘கொடி’ என்ற பெயரை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் இந்தப் பெயரைப் பதிவு செய்ய சென்றபோது ஏற்கெனவே வேறொருவர் இந்தப் பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தாராம். அவரிடமிருந்து முறைப்படி பேசி தலைப்பை விலைக்கே வாங்கிவிட்டார்களாம்.
முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறார்கள்.