ரூபி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹஷீர் தயாரிக்கும் புதிய படம் ‘வண்டி’
இந்தப் படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கணேஷ் பிரசாத் இரண்டாம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகனின் நண்பர்களாக கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரமேற்று நடித்து வரும் ஜான் விஜய் இப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக முக்கிய கதாப்பாத்திரமேற்று நடிக்கவுள்ளார். ‘சூது கவ்வும்’ போன்ற பல்வேறு படங்களின் மூலம் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த நடிகர் அருள்தாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நகைச்சுவை காட்சிகளில் கலக்க ‘லொள்ளு சபா’ சாமிநாதனும், மதன்பாப்பும் ஒன்று சேர்கிறார்கள்.
ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு, சுராஜ் எஸ்.குரூப் இசையமைக்க, ரீசால் ஜெய்னி படத் தொகுப்பை கவனிக்கிறார். கலை – மோகன மகேந்திரன் , சண்டை பயிற்சி – சிறுத்தை கே. கணேஷ், உடையலங்காரம் – சாரா விஜய் குமார் , பாடல்கள் – சிநேகன், கானா பாலா. இணை இயக்கம் – வி.அரசு, ஸ்டில்ஸ் – ஆனந்தன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, டிசைன் – ரஞ்சித். தயாரிப்பு நிறுவனம் – தீபக் மோகன், எழுத்து, இயக்கம் – ராஜேஷ் பாலா.
காமெடி திரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடியவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.