full screen background image

“கே.பி.யால் பட்டை தீட்டப்பட்டவன் நான்..” – நடிகர் சிவகுமாரின் புகழஞ்சலி..

“கே.பி.யால் பட்டை தீட்டப்பட்டவன் நான்..” – நடிகர் சிவகுமாரின் புகழஞ்சலி..

கே.பி. சார் விடைபெற்றுக் கொண்டார்.

நடிப்புலக வாழ்க்கையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தொட்ட எல்லையை இயக்குநராகத் தொட்ட  மேதை…

60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் – திரை உலகம் – சின்னத்திரையில் ஆட்சி செய்தவர்.

இவர் வாங்காத விருதுகள் – பட்டங்கள் எதுவும் இல்லை.

திருவாரூர் அருகில் நல்லமாங்குடியில் கர்ணம் கைலாசத்தின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்.. வெள்ளைக்காரக் கலெக்டரிடமே ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவார் இவரது தந்தையார்.

4 பெண்கள், 2 பிள்ளைகள். ஒரே ஜமுக்காள விரிப்பில் மொத்தக் குடும்பமும் தூங்க வேண்டும். எனக்கென்று பாய், தலையணை, போர்வை எப்போது கிடைக்கும் என்று ஏங்கிய சிறுவன்..

12 வயதிலேயே ‘நாட்டர்டேம் கூனன்’ வேடமேற்று பரிசு தட்டிச் சென்றார். பி.எஸ்.ஸி-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி… 1949 -50 முத்துப்பேட்டையில் ஆசிரியர்.

1951 -64 ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி. அங்கேயே ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் ஆங்கிலத்தில் எழுதி அதில் ஹீரோவாக நடித்தார்.

ராகினி கிரியேஷன்ஸ் குழு துவக்கி ‘நீர்க்குமிழி’, ‘மெழுகுவர்த்தி’ ‘சர்வர் சுந்தரம்’, ‘மேஜர் சந்த்ரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நவக்கிரகம்’ போன்ற நாடகங்களை நடத்தி சென்னையைத் கலக்கினார்.

‘நீர்க்குமிழி’யில் துவங்கி 100-க்கும் மேற்பட்ட படங்களில் இயக்குநராக, எழுத்தாளராக – பங்களிப்பு.

கமல், ரஜினி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ப்ரியா, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக், சுஹாசினி- என பெரிய பட்டாளத்துடன் நாகேஷ், மேஜர், சௌகார் – என எண்ணற்ற கலைஞர்கள் இவரால் பட்டை தீட்டப்பட்டனர். அடியேனும் அதில் ஒருவன்.

1970-ல் அதிகப்பட்ச டென்சனில் மாரடைப்பு ஏற்பட்டு 6 மாதம் படுக்கை. அப்போது சத்தியம் செய்தார். இனி சிகரெட்டை தொடுவதில்லையென்று..

பிஸி நடிகர்கள் எனக்குத் தேவையில்லை – புதுமுகங்கள் போதும் – படத்தில் ஏதாவது ஒரு செய்தி சொல்ல வேண்டும் – ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் என் படங்கள் இனி பெண்மையைப் போற்றும்விதமாக இருக்க வேண்டும். கடைசிவரை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்து, இந்த முடிவையும் கடைசிவரை காப்பாற்றினார்.

‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ – ‘அக்னிசாட்சி’ – ‘சிந்துபைரவி’ – என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அவரது படைப்புக்கள்!!!!

Our Score