full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – டிசம்பர் 25, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – டிசம்பர் 25, 2014

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் டிசம்பர் வியாழக்கிழமை – 25-12-2014

இன்று கிறிஸ்துமஸ் தினம் வியாழக்கிழமையே வந்துவிட்டதால் இன்றே படங்களை ரிலீஸ் செய்துவிட்டார்கள். வருடத்தின் கடைசி வாரமான இன்று 5 நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே ரிலீஸாகியுள்ளது.

1. மீகாமன்

meagamann-movie-poster-designs-5 (1)

நேமிக்சந்த்ஜெபக் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஆர்யா, ஹன்ஸிகா மோத்வானி நடித்திருக்கிறார்கள்.

2. வெள்ளைக்கார துரை

vellaikkara durai-movie-poster

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு தயாரித்திருக்கும் முதல் படம் இது. எழில் இயக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கின்றனர்.  மற்றும் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, பாவா லட்சுமணன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

3. கயல்

DSC_4739

எஸ்கேப் மூவி ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் படம் இது. இதில் சந்திரன், ஆனந்தி, வின்சென்ட், சந்திரமெளலி ஆகிய புதுமுகங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

4. கப்பல்

Kappal-Movie-Posters-1

ஐ ஸ்டூடியோஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 10 கோடி செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. இதில் வைபவ், சோனம் பாஜ்வா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடராஜன் சங்கரன் என்ற இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

5. என்றுமே ஆனந்தம்

Endrume Anandham Movie Stills (1)

அன்னை கருமாரி சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இந்த சின்ன பட்ஜெட் படத்தை விவேக் பாரதி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு கண்மணி ராஜா. ராஜ் கீர்த்தி இசையமைத்திருக்கிறார். சின்னத்திரையில் பல தொடர்களிலும், பெரிய திரையில் சின்னப் பையனாகவும் நடித்திருக்கும் மகேந்திரன் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடி ஸ்வாதி.

Our Score