2021 டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்

2021 டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்

கொரோனா 2-வது அலையின் காரணமாக பல முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு தாமதமானது.

கொரோனா தாக்கம் குறைவான பிறகு தற்போதுதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டு 100 சதவிகித பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தச் சூழலில் புதிய பிரச்சினையாக தமிழகமெங்கும் பெய்து வரும் கனமழையால் தியேட்டர் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வரும் டிசம்பர் மாதமும் ஒவ்வொரு வாரமும் வெளியிடுவதற்காக பல்வேறு திரைப்படங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

வருடக் கடைசி என்பதால் இத்தோடு படத்தை வெளியிட்டுவிட்டு கணக்கை முடிப்போம் என்ற மன நிலைக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.

வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இது :

தள்ளிப் போகாதே – டிசம்பர்-3-ம் தேதி வெளியாகிறது.

பேச்சிலர் – டிசம்பர்-9-ம் தேதி வெளியாகிறது.

ஜெயில் – டிசம்பர்-9-ம் தேதி வெளியாகிறது.

ஆண்டி இண்டியன் – டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

தேள் – டிசம்பர்-10-ம் தேதி வெளியாகிறது.

முருங்கக்காய்சிப்ஸ் – டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.

3:33 – டிசம்பர்-21-ம் தேதி வெளியாகிறது.

மேலும், பார்டர்’, ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘பிசாசு-2’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’, ‘வா டீல்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘மாமனிதன்’, ‘கடைசி விவசாயி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.

 
Our Score