படத்தின் டைட்டிலே ‘டைட்டில்’தானாம்..!

படத்தின் டைட்டிலே ‘டைட்டில்’தானாம்..!

ஒரு படத்திற்கு டைட்டில் வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டு யோசித்து, யோசித்து கதைக்குப் பொருத்தமாகவும், பேச்சு வழக்கில் மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தும் நாள் கணக்கில் மெனக்கெடுவார்கள் இயக்குநர்கள்.

ஆனால் இப்போது ஒரு படத்திற்கு அந்தப் பிரச்சினையே வேண்டாம் என்று நினைத்து ஒரு படத்தின் டைட்டிலுக்கு ‘டைட்டில்’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

இந்தப் புதுமையான படத்தினை டி.பி.கே. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜீத் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், மைம் கோபி, ரோபோ சங்கர், மாரிமுத்து, பிளாக் பாண்டி, கூல் சுரேஷ், ரேகா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ்.எம்.தங்கப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்ய அனல் ஆகாஷ் இசையமைக்க  மிரட்டல் செல்வா சண்டை இயக்கத்தை செய்ய, நடன இயக்கத்தை ராபா்ட் ராக் அமைக்க, ரகோத் விஜய் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் தலைப்பான டைட்டில்’ என்ற பெயரை புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.

இதற்காக படக் குழுவினரை புதுவை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து படத்தின் தலைப்பு ‘டைட்டில்’ என்பதைக் கேட்டுவிட்டு, ஆச்சரியத்துடன் “டைட்டிலுக்கே டைட்டிலா..?” என்று சொல்லி படக் குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன்’ படத்தின் ஹீரோவான ஆர்யாவும், நடிகை சிம்ரன் மற்றும் அந்தப் படத்தின் இயக்குநரான சக்தி சௌந்தர்ராஜன் மூவரும் வாழ்த்தி வெளியிட்டுள்ளனர்.

 
Our Score