மலையாளத் திரையுலகில் ஒரு பக்கம் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும், இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன.
அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘ஆலி’.
இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது.
தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் காதல்தான் படத்தின் கதைக் கரு.
இந்தக் காதலினால் அவளது குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம்தான் இந்த ‘ஆலி’ திரைப்படம்.
கதாநாயகியின் திருமணம் மதம், ஜாதி கடந்து எப்படி நடைபெறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் விறுவிறுப்பான உச்சக்கட்டம்.
இப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்
டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன். ஒரு பெண்ணாக இருந்து படத்தை இயக்கி இருக்கும் அவரே இந்தப் படத்திற்கான பாடல்களையும் எழுதி உள்ளார்.
மன்ஹர் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஒளிப்பதிவு – ரினாஸ் நாசர். அபு ஜியாத் படத் தொகுப்பு செய்துள்ளார். இசை –
ராமவர்மா தம்புரான், சுரேஷ் ரத்தீஷ் ராய், ஆர்.ஆர்.பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி.
படத்தில் அரபிப் பாடகர் ஹுசைன், ஹிந்திப் பாடகர் சம்பத் மற்றும் அரவிந்த் வேணுகோபால், ரித்து கிருஷ்ணா, சரிதா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
அரபி, இந்திப் பாடல்களுக்கு ரத்தீஷ் ராய் இசையமைத்து உள்ளார்.
ஒலியமைப்பு (SFS) – என். ஷாபு செருவல்லூர், டி ஐ – சஜய் சி.ஆர்.
நடனம் – அதுல் ராதாகிருஷ்ணன், சுனிதா நோயல் ஹாய், கலை இயக்கம் – அகிலேஷ், ஷிஜு அபாஸ்கர், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – ஸ்ரீதர், பத்திரிக்கை தொடர்பு – சக்தி சரவணன்.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.









