இயக்குநர் சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை மிக வித்தியாசமான எழுதியிருக்கிறார் கபிலன்.
இயக்குநர் சரண் இதுவரையில் இயக்கிய புகழ் பெற்ற படங்களின் பெயர்கள் இந்தப் பாடலின் சரணத்தில் இடம் பெறுவதுபோல இப்பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.
அந்தப் பாடல் இதோ :
பல்லவி
ஆண்:
மாங்கா பீசுல இந்த மாங்கா பீசுல
மொளகா பொடி முத்தத்தால
கலகம் செஞ்சு புட்ட
பெண்:
சுட்ட நரம்புல என் எச்சி பட்டதுல
கெக்க பெக்க கொழந்த பயன்
ரெக்க மொளச்சிட்ட
ஆண்:
காதலிக்கும்போது எனக்கு படபடங்குது
நீ அழைக்கும் நேரம் இங்க தொட நடுங்குது
தட்ப வெப்பம் கடந்து வர என்ன செய்யணும்?
தானைத்தலைவி என் திரைவிலக்கணும்
பெண்:
அட தொண்டா
ஒரு வண்டா
நீ என்னோடு ஓடி வா
சரணம் 1
ஆண்:
காதல் மன்னனாக நான் நெருங்கிவரும் நொடியில்
பாதரச பார்வை பட்டு பரிதவிப்பேனே
பெண்:
கண்கள் ரெண்ட மூடி ஒரு காம வேர்வை மூட்டி
அமர்க்களமாய் அணைத்துக்கொண்டால் அவிழ்ந்திடுவேனே
ஆண்:
தயக்கங்களாலே நெருக்கங்கள் ஜேஜே
தவறுகளாலே இரவுகள் ஜேஜே
பெண்:
டேய் மாப்பி நான் பீப்பி
ஜெமினி பொம்ம போல என்ன வாசி
சரணம் 2
ஆண்:
சேல கட்டி முடிப்ப அந்த இடைவெளிய கொடுப்ப
தள்ளி நின்னு பாத்து பாத்து ரசித்திடுவேனே
பெண்:
அட்டகாசமாக நீ சட்ட மாட்டி வருவ
பட்டனெல்லாம் கழட்டிவிட்டு கட்டிக்கொள்வேனே
ஆண்:
அடங்கும் என் நெஞ்சம் பொய் எனத் தோன்றும்
உருகும் என் நெஞ்சே அசல் எனத் தோன்றும்
பெண்:
ஒரு உடம்பில் இரு இதயம்
இந்த படத்தின் தலைப்பு உனக்கு பொருந்தும்.









