full screen background image

மீடியம் பட்ஜெட் படமாம் – பாடல் காட்சியில் 10 நாட்கள் 300 துணை நடிகர்கள் நடித்தார்களாம்..!

மீடியம் பட்ஜெட் படமாம் – பாடல் காட்சியில் 10 நாட்கள் 300 துணை நடிகர்கள் நடித்தார்களாம்..!

விபின் மூவி பட நிறுவனம் சார்பாக எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவண மாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன் ஆகியோர் இணைந்து  தயாரிக்கும் படம் “வெத்து வேட்டு.”

ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘விழா’ பட நாயகி மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, மாக்கான், கிரேன் மனோகர், போண்டாமணி, வெங்கல்ராவ், சின்ன சில்க் உமா, நந்தகுமார், ‘கம்பம்’ மீனா, நாஞ்சில் சரண் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –   காசி

இசை – தாஜ்நூர்

பாடல்கள் – யுகபாரதி

கலை  –  உமாசங்கர்    

நடனம்   –  தினா

ஸ்டண்ட்    –  ஆக்சன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை –  A.V.பழனிச்சாமி

இணை தயாரிப்பு  –  A.லட்சுமணன்

தயாரிப்பு  –   எஸ்.குமார், A.ராமசாமி, D.சரவணமாணிக்கம், R.மூர்த்தி, A.லட்சுமணன்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – எஸ்.மணிபாரதி.

படம் பற்றி இயக்குநர் மணிபாரதி பேசும்போது, “கிராமத்து காதலை மிக யதார்த்தமாக இதில் பதிவு செய்திருக்கிறோம். ஜனரஞ்சகமாக, அதே நேரம் இளைஞர்களுக்கு பிடித்த காதல் படமாகவும் இது இருக்கும். எழுபது சதவிகிதம் காமெடி, இருபது சதவிகிதம் காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். படத்தின் பாடல் காட்சிகளுக்கு பத்து நாட்களுக்கு 300 துணை நடிகர்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சி, பொள்ளாச்சி, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படிப்பிப்பின் கடைசி நாளன்று படப்பிடிப்பிற்கு உதவிய திருச்சி அருகிலுள்ள ‘கோப்பு’ கிராமத்து மக்கள் ஐநூறு பேருக்கும் கிடா வெட்டி விருந்து வைத்தோம். அவர்கள் அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்து பாராட்டினார்கள். படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது..” என்றார்.

Our Score