full screen background image

சுத்தமான-அமைதியான-தெய்வீகமான ‘U / A’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறதாம்..!

சுத்தமான-அமைதியான-தெய்வீகமான ‘U / A’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறதாம்..!

வித்தியாசமே உன் பெயர்தான்  ‘ஜில் ஜங்  ஜக்’ என்பதோ, என்னும் அளவுக்கு இந்தப் படத்தின் எல்லா அம்சங்களும் வித்தியாசமாகவே இருக்கின்றன.

படத்தின் தலைப்பும், கதையும், நடிகர் நடிகையர் தேர்வும், தெறிக்கும் பாடல்களும், எல்லோரையும் கவர்ந்திழுத்திருக்கும் டீஸர் அண்ட் டிரெயிலரும், கண் கவர் ஒளிப்பதிவும், வித்தியாசமான விளம்பர யுக்திகளும் இந்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தை வித்தியாசமான படம் என்று ரசிகர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

தற்போது படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள், இந்தப் படத்துக்கு  ‘U / A’  சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து தன் மனதில்பட்டதை எப்போதும் பட்டவர்த்தனமாக சொல்லும் குணமுடைய படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவுமான நடிகர்  சித்தார்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ரொம்பவும் சந்தோசம். சுத்தமான, அமைதியான, தெய்வீகமான U/A  கிடைத்ததற்கு நன்றி..”  என்று கூறியுள்ளார்.

படமெங்கும்  உள்ள வித்தியாசம் தயாரிப்பாளரின் இந்த 2 வரி ட்வீட்டிலும் தெறிப்பதை ரசித்த ரசிகர்கள், வருகின்ற 12-ம் தேதி வெளி வரவுள்ள ‘ஜில் ஜங் ஜக்’ வருகையையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Our Score