இது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) 26-10-2026 இன்று வெளியிட்ட புதிய அறிவுரை.
முக்கிய விதிகளின் தமிழ் விளக்கம்:
1. முழுமையான இறுதி பதிப்பு கட்டாயம்:
சென்சாருக்கு நீங்கள் முழு படத்தையும் தான் கொடுக்க வேண்டும். Title, credits, subtitle, disclaimer, இறுதி இசை, sound mix, எல்லாம் முடிந்த பிறகு தான் கொடுக்க வேண்டும். CBFC சான்றிதழ் கொடுத்த அந்த பதிப்பை மட்டும் தான் தியேட்டரில் திரையிட முடியும்.
2. தலைப்பு இறுதியானது அல்ல:
நீங்கள் விண்ணப்பத்தில் ஒரு தலைப்பை பதிவு செய்ததாலேயே CBFC அதை அங்கீகரித்துவிட்டதாக அர்த்தம் இல்லை.
Examining Committee அந்த தலைப்பை மாற்றவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்.
சான்றிதழ் கிடைக்கும் முன் தலைப்பை இறுதி என்று விளம்பரம் செய்ய வேண்டாம்.
3. முழுமையடையாத பிரிண்ட் கூடாது:
தற்காலிக கிராபிக்ஸ், தற்காலிக இசை, அல்லது முழுமையடையாத படத்தை கொடுக்க கூடாது.
அப்படி கொடுத்தால் விண்ணப்பம் தாமதமாகும். திருப்பி அனுப்பப்படும் அல்லது நிராகரிக்கப்படும். எல்லா ஆவணங்களையும் சரியாக கொடுத்த பிறகு தான் விண்ணப்ப தேதி கணக்கிடப்படும்.
4. ரிலீஸ் தேதியை காரணம் காட்டி வேகமாக சான்றிதழ் கிடைக்காது:
“என் படம் இந்த தேதியில் ரிலீஸ்” என்று சொல்லி CBFC-யிடம் வேகமாக சான்றிதழ் கேட்க முடியாது.
அவர்கள் தங்கள் நடைமுறைப்படிதான் வேலை செய்வார்கள். உங்கள் ரிலீஸ் தேதிக்காக சட்ட நடைமுறைகளை குறைக்க மாட்டார்கள்.
5. முன்கூட்டியே திட்டமிட வேண்டும்:
எல்லா தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தின் ரிலீஸ் தேதிக்கு ரொம்ப முன்னாடியே விண்ணப்பிக்க வேண்டும்.
படத்தை பரிசோதிக்க, கமிட்டி ரிவியூ செய்ய, மற்றும் போர்டு சொல்லும் திருத்தங்களை செய்ய தேவையான நேரத்தை கணக்கில் வைத்து முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
எல்லோரும் 1952 சினிமாட்டோகிராப் சட்டம் மற்றும் 2024 விதிகளை கண்டிப்பாக பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் சான்றிதழ் வேலைகள் வேகமாகவும் சீராகவும் நடக்கும்.
இது அதிகாரப்பூர்வ அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது.









