டிஎன்எஸ் மூவி புரொடெக்சன்ஸ் சார்பில் செல்வி சங்கரலிங்கம் தயாரித்திருக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கககபோ.’
இத்திரைப்படத்தில் கேசவன், சாக்ஷி அகர்வால் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும் வடிவுக்கரசி, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி, ரோபோ ஷங்கர் உட்பட 25-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
இயக்கம் – பி.எஸ்.விஜய், இசை – தீனா, பி.சி.சிவம், சி.வி.அமரா, ஒளிப்பதிவு – இக்பால், விக்ரம், படத் தொகுப்பு – பிரபாகர், கலை – ரவீந்திரன், மகேந்திரன், பாடல்கள், கானா பாலா, பூ கார்த்திக், பி.எஸ்.விஜய், சண்டை பயிற்சி – விஜய் ஜாகுவார், பாடியவர்கள் – கானா பாலா, முகேஷ், திவாகர், ரீட்டா, ஸ்ருதிகா, காவி வர்ஷினி, நடனம் – சாண்டி, சுரேஷ்.
இத்திரைப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. இந்த பாடலை ‘தாமரை’ தொடரில் நடித்த சின்னத்திரை நட்சத்திரங்களான சாய் பிரசாத், ‘தென்றல்’ தொடரில் நடித்த ‘காவி வர்ஷினி’, ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்த கிருத்திகா, ‘கோலங்கள்’ தொடரில் நடித்த ஷ்யாம், வாணி ராணி தொடரில் நடித்த நீலிமா மற்றும் பாடகர் ஜகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதேபோல் இந்த பாடலும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. எனவே இப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிடுகிறார்களாம்.