D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்D.வெங்கடேஷ் தயாரித்திருக்கும் படம் ‘கண்கள் இரண்டால்.’
மலையாளத்தில் ‘மிஸ்ஸஸ் லேக்கா தரூர்’ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் ‘கண்கள் இரண்டால்’ என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது.
இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கிறார். கதாநாயகனாக அலெக்ஸ் நடித்திருக்கிறார். மற்றும் வேணி, முத்துலஷ்மி, மகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்திரமௌலி, இசை – ரமேஷ் நாராயணன், எடிட்டிங் – நாகிரெட்டி, வசனம் – நந்து, பாடல்கள் – சி.புண்ணியா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஷாஜியம்.
படம் பற்றி இயக்குநர் ஷாஜியம் பேசும்போது, “மீரா ஜாஸ்மின் முதல் முறையாக இந்தப் படத்தில் பார்வையற்ற பெண்ணாக மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார். இந்த நிலையிலும் டிவி சேனல் ஒன்றி ரியாலிட்டி ஷோ நடத்திவருகிறார் மீரா. இதற்கிடையில் காதலில் விழுந்த மீரா ஜாஸ்மினுக்கு கண் ஆபரேசன் செய்ய காதலன் ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் மீரா ஜாஸ்மினுக்கு தனது உடம்பில் எதோ ஒரு ஆவி இருப்பது போல் ஒரு உணர்வு. எப்போதும் தனது அருகில் ஏதோ ஒரு உருவம் இருப்பதுபோல் அவருக்குள் ஒரு உள்ளுணர்வு இருந்து கொண்டேயிருக்கிறது.
இறுதியில் அது வெறும் உணர்வுதானா அல்லது நிஜமாகவே அவரது உடலில் ஆவி இருந்ததா..? அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்தார்களா இல்லையா..? பார்வை வந்ததா.. இல்லையா..? என்பதுதான் படத்தின் திரைக்கதை. திரில்லர் மற்றும் காதல், நட்பு போன்ற அணைத்தும் கலந்ததுதான் இந்த ‘கண்கள் இரண்டால்’ படம்..” என்றார்.









