சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களையும் மூடுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், நாளை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள மவுன ஆர்ப்பாட்டத்திலும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Our Score










