சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தத் தொடர் வெற்றியை அறுவடை செய்வதற்காக அடுத்து வரவிருக்கும் படம்தான் ‘ஆலமரம்’.
இயக்குனர் பாக்யராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.என்.துரைசிங், இந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
“பொதுவாக சஸ்பென்ஸ், திரில்லர் படங்களில் வரும் அந்நிய மொழி வாடை என் படத்தில் இருக்காது. நம் மண்ணின் மனதை சார்ந்த ஒரு காதல் கதையைதான் நான் திகில் கலந்து சொல்லியிருக்கிறேன்ன். இது எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். புதிய இசை அமைப்பாளர் ராம் ஜீவனின் இசையில் வெளிவந்து பிரபலமான இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் விளம்பர வரவேற்பை பெற்று தந்துள்ளது…” என்கிறார் துரைசிங்.
‘ஆலமரம்’ திரைப்படம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளிவர தயாராக உள்ளது.