full screen background image

ஆஸ்கார்-ஐ நோக்கிப் பயணிக்கும் ‘இசைஞானி’ இளையராஜா!

ஆஸ்கார்-ஐ நோக்கிப் பயணிக்கும் ‘இசைஞானி’ இளையராஜா!

‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த் திரைப்படம் “அந்தோனி”யின் ஆஸ்கார் நோக்கிய பயணம் துவங்கியுள்ளது.

ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும்,

கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும்,

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில்,

மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற வெற்றித் திரைப்படமாக மாறியிருந்தது ‘அந்தோணி’ திரைப்படம்!

திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் இந்தப் படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ‘அந்தோணி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக் கூட்டு ஸ்தாபனத்தினூடாக 2027-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருது விழாவிற்கான தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

உலமறிந்த மாபெரும் இசை மேதை The Maestro என்ற அழைக்கப்படும் ‘இசை ஞானி’ இளையராஜாவின் இசை வரலாற்றில் முதல் இலங்கை தமிழ் திரைப்படம் எனும் பெருமையை கொண்ட இப்படைப்பிற்கு உலகளாவிய ரீதியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Our Score